Ethai naan tharuvaen Iraivaa- um
Ithayathin anbitkeedaaka
Ethai naan tharuvaen Iraivaa...2

எதை நான் தருவேன் இறைவா- உம்
இதயத்தின் அன்பிற்கீடாக
எதை நான் தருவேன் இறைவா...2


Kurai naan seithaen Iraivaa- paava
Kuliyil vilunthaen Iraivaa...2
Karaiyaam paavathai neekkidavae...(2) Neer
Kalvaari malaiyil irenthaayoe

குறை நான் செய்தேன் இறைவா- பாவக்
குழியில் விழுந்தேன் இறைவா...2
கறையாம் பாவத்தை நீக்கிடவே...(2) நீர்
கல்வாரி மலையில் இறந்தாயோ

Paavam endroru vishathaal naam
Paathagam seithaen Iraivaa...2
Thaevanae um thirupaadugalaal..(2) Ennai
Thaettridavae neer irenthaayoe

பாவம் என்றொரு விஷத்தால் நான்
பாதகம் செய்தேன் இறைவா...2
தேவனே உம் திருப்பாடுகளால்..(2) என்னை
தேற்றிடவே நீர் இறந்தாயோ

Agilamae arivaal alanthaen- un
Anbaiyum arinthu maranthaen...2
Magimai niraintha en Iraivaa...(2) Neer
Manithan enakkaai irenthaayoe

அகிலமே அறிவால் அளந்தேன்- உன்
அன்பையும் அறிந்து மறந்தேன்...2
மகிமை நிறைந்த என் இறைவா...(2) நீர்
மனிதன் எனக்காய் இறந்தாயோ

Kanakkindri thavarugal seithu indru
Kanneer vadikkindraen Iraivaa...2
Pinakkidri ummudan naan vaala...(2) Neer
Piraranbaik kaattida irenthaayoe

கணக்கின்றி தவறுகள் செய்து இன்று
கண்ணீர் வடிக்கின்றேன் இறைவா...2
பிணக்கின்றி உம்முடன் நான் வாழ...(2) நீர்
பிற ரன்பைக் காட்டிட இறந்தாயோ




























































Site hosted by Angelfire.com: Build your free website today!