Karunai Theivamae kan paarum
Engal paavangalai neer porutharulum
கருணை தெய்வமே கண்பாரும்
எங்கள் பாவங்களை நீர் பொறுத்தருளும்
Udalum arivum manamum
Ondru saernthu ummai ethirthathaiyaa
Thaeva kattalai valiyai
Manam panmurai arinthae veruthathaiyaa
Paava saettrai vaalvil
Em vaalvae kondu nirainthathaiyaa
உடலும் அறிவும் மனமும்
ஒன்று சேர்ந்து உம்மை எதிர்ததையா
தேவ கட்டளை வழியை
மனம் பன்முறை அறிந்தே வெறுத்ததையா
பாவச் சேற்றை வாழ்வில்
எம் வாழ்வே கொண்டு நிறைந்ததையா
Paathai thelivura therinthum, athai
Paarthu naangal nadakkavillai
Unmai vilakku erinthum, athan
Oliyin arukae vaalavillai
Iraivan anbu alaithum, athai
Unarntha pinnum thirunthavillai
பாதை தெளிவுறத் தெரிந்தும், அதைப்
பார்த்து நாங்கள் நடக்கவில்லை
உண்மை விளக்கு எரிந்தும், அதன்
ஒளியின் அருகே வாழவில்லை
இறைவன் அன்பு அழத்தும், அதை
உணர்ந்த பின்னும் திருந்தவில்லை
Anbu seiyum iraivaa, unnai
Maranthu sendrathai ennughiroem
Neethi niraiyum thalaivaa, em
Paavathai ninaithae kalanggugiroem.
Thooya vaalvin niraivae, un
Mannipputh tharuvaai uyir peruvoem
அன்பு செய்யும் இறைவா, உன்னை
மறந்து சென்றதை எண்ணுகிறோம்
நீதி நிரையும் தலைவா, எம்
பாவத்தை நினைத்தே கலங்குகிறோம்.
தூய வாழ்வின் நிறைவே, உன்
மன்னிப்புத் தருவாய் உயிர் பெருவோம்